வாகன சாரதி பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் கன்டர் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று(29) மதியம் 1.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் வாகன சாரதி பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்பகுதியாக வந்த கன்டர் ரக வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் சாரதி பயிற்சி மேற்கொண்ட இளைஞன் சிறு காயமடைந்துள்ளான்.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை செல்லும் மற்றும் பாடசாலை முடிவடையும் நேரங்களில் குறித்தொதுக்கப்பட்ட பிரதேச வீதியில் கனரக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்ட நேரத்தில் குறித்த கன்டர் ரக வாகனம் விபத்தை ஏற்படுத்தியது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன சாரதி பயிற்சி வழங்கிய ஓட்டோவுடன் கன்டர் மோதி விபத்து; இளைஞன் காயம் - கிளிநொச்சியில் சம்பவம் வாகன சாரதி பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் கன்டர் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று(29) மதியம் 1.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த பகுதியில் வாகன சாரதி பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்பகுதியாக வந்த கன்டர் ரக வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் சாரதி பயிற்சி மேற்கொண்ட இளைஞன் சிறு காயமடைந்துள்ளான். பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை செல்லும் மற்றும் பாடசாலை முடிவடையும் நேரங்களில் குறித்தொதுக்கப்பட்ட பிரதேச வீதியில் கனரக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்ட நேரத்தில் குறித்த கன்டர் ரக வாகனம் விபத்தை ஏற்படுத்தியது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.