• Jul 30 2025

கிண்ணியாவில் இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி!

Thansita / Jul 29th 2025, 8:53 pm
image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி ஒன்று இன்று ஆரம்பமானது.

இக்கண்காட்சியில் மாணவர்களின் சுய கண்டுபிடிப்புகள், பல்வர்ண ஓவியங்கள், விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில், அதிதிகளாக, கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம் குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்வி அதிகாரி ஆர். நசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கண்காட்சி இன்று முதல் 31 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை பார்வையிட்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு,  சிறந்த சந்தர்ப்பம்  கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது


கிண்ணியாவில் இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி ஒன்று இன்று ஆரம்பமானது.இக்கண்காட்சியில் மாணவர்களின் சுய கண்டுபிடிப்புகள், பல்வர்ண ஓவியங்கள், விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.இன்றைய ஆரம்ப நிகழ்வில், அதிதிகளாக, கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம் குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்வி அதிகாரி ஆர். நசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கண்காட்சி இன்று முதல் 31 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை பார்வையிட்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு,  சிறந்த சந்தர்ப்பம்  கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement