• Jul 30 2025

இலங்கை திரும்பிய நாமல்! கைது செய்யப்படுவாரா?

Chithra / Jul 29th 2025, 2:17 pm
image


 

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவதைப் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை திரும்பிய நாமல் கைது செய்யப்படுவாரா  பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவதைப் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement