நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்க்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இ மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில்
குறித்த இரண்டு கட்சிகளும் தமது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், அணில் சின்னத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிடுபவருமான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
பருத்தித்துறை பிரதேச சபையில் ஆறு கட்சிகளும் தமது அணில் சின்னத்திலான சுயேட்சை குழுவுமாக போட்டியிடுகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளவர்கள் தமது சுயேட்சை குழுவில் போட்டியிடுவதாகவும், தமக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் தமது ஆதரவு எந்த கட்சிக்கு என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது ஆதரவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்- இ.முரளிதரன் தெரிவிப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்க்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இ மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இரண்டு கட்சிகளும் தமது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், அணில் சின்னத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிடுபவருமான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.பருத்தித்துறை பிரதேச சபையில் ஆறு கட்சிகளும் தமது அணில் சின்னத்திலான சுயேட்சை குழுவுமாக போட்டியிடுகின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளவர்கள் தமது சுயேட்சை குழுவில் போட்டியிடுவதாகவும், தமக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் தமது ஆதரவு எந்த கட்சிக்கு என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.