• Jul 29 2025

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு

Chithra / Jul 29th 2025, 9:07 am
image


யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள்  52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் , 44 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவர்களது  17 வயதுடைய மகள்   என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், 

அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்கள்  52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் , 44 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவர்களது  17 வயதுடைய மகள்   என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement