• Sep 20 2024

இரண்டு மாதங்களில் இலங்கையில் மாற்றம் வரும் - 13ஆவது திருத்தமே தீர்வு! - அண்ணாமலை அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 16th 2023, 4:14 pm
image

Advertisement

இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் மோடி தலைமையிலான அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை தொடர்குண்டு தாக்குதலில் உயிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் என்பன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம்பி இருப்பதாகவும் அங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவித்திகளை அனைதையும் இந்தியாவே முன்னெடுத்து வருவதாக கே.அண்ணாமலை தெரிவித்தள்ளார்.

இலங்கையில் பெரும்பான்மையான அபிவிருத்தி திட்டங்கள் மோடியை நம்பியே இருப்பதாகவும் இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் 13வது திருத்ததை அமுல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் நல்ல விடயங்களை நடைபெறவுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களில் இலங்கையில் மாற்றம் வரும் - 13ஆவது திருத்தமே தீர்வு - அண்ணாமலை அறிவிப்பு SamugamMedia இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் மோடி தலைமையிலான அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை தொடர்குண்டு தாக்குதலில் உயிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் என்பன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம்பி இருப்பதாகவும் அங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவித்திகளை அனைதையும் இந்தியாவே முன்னெடுத்து வருவதாக கே.அண்ணாமலை தெரிவித்தள்ளார்.இலங்கையில் பெரும்பான்மையான அபிவிருத்தி திட்டங்கள் மோடியை நம்பியே இருப்பதாகவும் இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் 13வது திருத்ததை அமுல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் நல்ல விடயங்களை நடைபெறவுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement