ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் B குழுவில் இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான போட்டியில் அவஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக நிலக்ஷிகா சில்வா 29 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மேகன் ஸ்குட் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
94 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக பெத் மூனி அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த தோல்வியின் ஊடாக இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் அணியின் உலக கிண்ண கனவு கேள்விக்குறி- அபாரமான பந்துவீச்சில் மிரட்டிய ஆஸி ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் B குழுவில் இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான போட்டியில் அவஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பாக நிலக்ஷிகா சில்வா 29 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மேகன் ஸ்குட் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.94 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக பெத் மூனி அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்த தோல்வியின் ஊடாக இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.