• May 04 2024

இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

Tamil nila / Mar 25th 2024, 8:56 pm
image

Advertisement

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நான்காம் நாளான இன்று 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 5 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற லஹிரு குமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 - 0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நான்காம் நாளான இன்று 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 5 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற லஹிரு குமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றது.முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 - 0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement