• Jun 26 2024

வயதான தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் - இலங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Chithra / Jun 17th 2024, 3:35 pm
image

Advertisement


மாத்தளையில் தனது எழுபது வயதான தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரங்கல, கனுமுலய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், ஆண் ஒருவருடன் வீட்டுக்கு வந்து தங்க முற்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, சந்தேகநபரான பெண் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல பதில் நீதவான் ஷியாமலி விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வயதான தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் - இலங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு மாத்தளையில் தனது எழுபது வயதான தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரங்கல, கனுமுலய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண், ஆண் ஒருவருடன் வீட்டுக்கு வந்து தங்க முற்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, சந்தேகநபரான பெண் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த பெண்ணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல பதில் நீதவான் ஷியாமலி விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement