• Jun 26 2024

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் - மிகவும் நல்ல சாதனை - நிதி இராஜாங்க அமைச்சர்

Chithra / Jun 17th 2024, 3:46 pm
image

Advertisement

 

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான இந் நாட்டின், இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும்.

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் குறைந்த (மைனஸ்) 7 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் - மிகவும் நல்ல சாதனை - நிதி இராஜாங்க அமைச்சர்  உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான இந் நாட்டின், இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும்.உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் குறைந்த (மைனஸ்) 7 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement