இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவரையில் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலிய பொலிஸ் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இலங்கையர் என்ற பெருமையைக் கொண்ட ஷெஹான், சக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற ஒரு அதிகாரியாகத் திகழ்ந்தார். இத்தாலியில் வசித்து வரும் அவரது பெற்றோரும் இந்தத் திடீர் இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் இத்தாலியில் வாழும் இலங்கை சமூகத்தினர் மத்தியிலும், அந்நாட்டு பொலிஸ் துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் இன்று இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் பணியாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இத்தாலிய பொலிஸ் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இலங்கையர் என்ற பெருமையைக் கொண்ட ஷெஹான், சக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற ஒரு அதிகாரியாகத் திகழ்ந்தார். இத்தாலியில் வசித்து வரும் அவரது பெற்றோரும் இந்தத் திடீர் இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.இந்தச் சம்பவம் இத்தாலியில் வாழும் இலங்கை சமூகத்தினர் மத்தியிலும், அந்நாட்டு பொலிஸ் துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் இன்று இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.