• Nov 25 2024

இலங்கையில் தாயின் கொடூர செயல் - 4 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பயங்கரம்

Chithra / Jul 18th 2024, 12:28 pm
image

 

கேகாலை -  ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி நேற்று தனது குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு 11 மணிக்கும், நேற்று அதிகாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் ஊமை பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தாயின் கொடூர செயல் - 4 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பயங்கரம்  கேகாலை -  ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி நேற்று தனது குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 16ஆம் திகதி இரவு 11 மணிக்கும், நேற்று அதிகாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த சிறுமியின் தாய் ஊமை பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement