• Nov 22 2024

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு மௌன அஞ்சலி..!

Chithra / May 22nd 2024, 11:29 am
image

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை  நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச, மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ மற்றும் பலர் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இவர்கள் அனைவருக்கும் இஸ்லாத்தின் படி சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர்கள் உட்பட அனைவரும் மறைந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு மௌன அஞ்சலி.  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை  நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி, நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச, மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ மற்றும் பலர் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.இவர்கள் அனைவருக்கும் இஸ்லாத்தின் படி சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.பின்னர் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர்கள் உட்பட அனைவரும் மறைந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement