சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 318.32 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 328.69 ரூபாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்பட்டிருந்த சில பொருளாதார அழுத்தங்கள் காரணமாகக் கடந்த சில நாள்களாக ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று ரூபா மீண்டும் வலுப்பெற்றிருப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் ஓரளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் சரிவில் இருந்து மீண்டது இலங்கை ரூபா சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 318.32 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.அதேபோல், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 328.69 ரூபாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சந்தையில் ஏற்பட்டிருந்த சில பொருளாதார அழுத்தங்கள் காரணமாகக் கடந்த சில நாள்களாக ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று ரூபா மீண்டும் வலுப்பெற்றிருப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் ஓரளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.