• Sep 29 2024

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு 'டொபி'யால் ஏற்பட்டுள்ள ஆபத்து! வைத்தியர் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Apr 20th 2023, 11:01 am
image

Advertisement

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அமில சந்திரசிறி மற்றும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளர் இஷார வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இதுவரை ஐஸ் ஹெரோயின் போன்ற கடுமையான போதைப்பொருள் பாவனை பதிவாகவில்லை.


எனினும் பாடசாலைகளில் தரம் 9 - 10 ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களிடையே இவ்வாறான போதைக்கு பலியாகும் அபாயம் அதிகம் என இந்த சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள தூரமும், பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பதுமே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு 'டொபி'யால் ஏற்பட்டுள்ள ஆபத்து வைத்தியர் அதிர்ச்சித் தகவல் samugammedia இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அமில சந்திரசிறி மற்றும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளர் இஷார வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இதுவரை ஐஸ் ஹெரோயின் போன்ற கடுமையான போதைப்பொருள் பாவனை பதிவாகவில்லை.எனினும் பாடசாலைகளில் தரம் 9 - 10 ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களிடையே இவ்வாறான போதைக்கு பலியாகும் அபாயம் அதிகம் என இந்த சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள தூரமும், பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பதுமே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement