• Nov 26 2024

செங்கடலுக்கு செல்லவுள்ள இலங்கை கப்பல்கள்..!samugammedia

Tharun / Jan 16th 2024, 1:27 pm
image

இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய செங்கடலில் கவுதி போராளிகளால்  மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின்  விஜயபாகு, கஜபாகு கடற்படைக் கப்பல்கள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கப்பலில் சுமார் 100 மாலுமிகள் பணிபுரிகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பல்கள் உலங்கு வானூர்தி தரையிறங்கும் வசதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இதே வேளை கப்பல் புறப்படுவதற்கான திகதி மட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல், அரபிக்கடல் ஏடன் வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பாதைகளில் இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புரொஸ்பெரிட்டி கார்டியன்ஸ் நடவடிக்கையின் கீழ் இலங்கை முதலில் ஒரு கப்பலை அனுப்பும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர்,  இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் கப்பலின் திறமையை அடிப்படையாக வைத்து அதனை பயன்படுத்துவோம் எனவும், தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம். என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்

செங்கடலுக்கு செல்லவுள்ள இலங்கை கப்பல்கள்.samugammedia இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய செங்கடலில் கவுதி போராளிகளால்  மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின்  விஜயபாகு, கஜபாகு கடற்படைக் கப்பல்கள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் சுமார் 100 மாலுமிகள் பணிபுரிகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பல்கள் உலங்கு வானூர்தி தரையிறங்கும் வசதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இதே வேளை கப்பல் புறப்படுவதற்கான திகதி மட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல், அரபிக்கடல் ஏடன் வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பாதைகளில் இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் புரொஸ்பெரிட்டி கார்டியன்ஸ் நடவடிக்கையின் கீழ் இலங்கை முதலில் ஒரு கப்பலை அனுப்பும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர்,  இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் கப்பலின் திறமையை அடிப்படையாக வைத்து அதனை பயன்படுத்துவோம் எனவும், தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலதிக கப்பல்களை செங்கடல் பகுதிக்கு அனுப்புவோம். என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement