• Jan 13 2025

விமானத்தில் இலங்கையரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி; அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chithra / Jan 10th 2025, 9:42 am
image


அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நேற்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தற்சமயம் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையர் பிணையில் உள்ளார்.

அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியா அல்லது அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் தங்கியிருப்பார்.

பிணைநிபந்தனைகளின் கீழ், அவர் வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இலங்கையரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி; அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நேற்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தற்சமயம் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையர் பிணையில் உள்ளார்.அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியா அல்லது அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் தங்கியிருப்பார்.பிணைநிபந்தனைகளின் கீழ், அவர் வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement