• May 05 2024

சவூதிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு எஜமானால் நடந்த கொடுமை..!

Chithra / Jan 1st 2024, 8:36 pm
image

Advertisement

 

சவூதி அரேபியாக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் அங்கு தனது எஜமானாரால்  தாக்கப்பட்டு சுகவீனமடைந்த நிலையில், அங்கவீனத்துடன்  இன்று திங்கட்கிழமை   காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சுரேனி வாசனா என்ற நான்கு பிள்ளைகளின் தாயாவார். 

சரியாக நடக்கவோ, பேசவோ  முடியாத நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

எங்கள் குடும்பம் பொருளாதாரக் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், 

வீட்டு வேலைக்காக நான் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்றேன்.

நான் சவூதி அரேபியாவின் அல் அஸாத் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்தேன். 

அந்த வீட்டின் வாழ்ந்த  வயோதிபர் ஒரு தொழிலதிபர். 

கடந்த ஜூன் மாதம் நான் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய திட்டமிட்டார். நான் அதற்கு எதிராக இருந்தேன்.  

மேலும், அந்த வீட்டின்  எஜமானாரால் நான் கடுமையாக தாக்கப்பட்டடேன்.   தலையை சுவரில் மூன்று முறை அடித்தார். அதனால் கடுமையாக நான் பாதிக்கப்பட்டேன்.

இந்நிலையில், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்த அவர்,  அந்தப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் என்னை அனுமதித்தார்,

அங்கு என் தலையில் தையல் போடப்பட்டு, பல மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவ சிகிச்சை  பெற்றதாகவும் கூறினார்.

சவூதிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு எஜமானால் நடந்த கொடுமை.  சவூதி அரேபியாக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் அங்கு தனது எஜமானாரால்  தாக்கப்பட்டு சுகவீனமடைந்த நிலையில், அங்கவீனத்துடன்  இன்று திங்கட்கிழமை   காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.இவர் நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சுரேனி வாசனா என்ற நான்கு பிள்ளைகளின் தாயாவார். சரியாக நடக்கவோ, பேசவோ  முடியாத நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.எங்கள் குடும்பம் பொருளாதாரக் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வீட்டு வேலைக்காக நான் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்றேன்.நான் சவூதி அரேபியாவின் அல் அஸாத் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்தேன். அந்த வீட்டின் வாழ்ந்த  வயோதிபர் ஒரு தொழிலதிபர். கடந்த ஜூன் மாதம் நான் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய திட்டமிட்டார். நான் அதற்கு எதிராக இருந்தேன்.  மேலும், அந்த வீட்டின்  எஜமானாரால் நான் கடுமையாக தாக்கப்பட்டடேன்.   தலையை சுவரில் மூன்று முறை அடித்தார். அதனால் கடுமையாக நான் பாதிக்கப்பட்டேன்.இந்நிலையில், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்த அவர்,  அந்தப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் என்னை அனுமதித்தார்,அங்கு என் தலையில் தையல் போடப்பட்டு, பல மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவ சிகிச்சை  பெற்றதாகவும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement