• May 18 2024

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலை - பொதுமக்கள் ஒன்றிணைந்து சீர்திருத்தம்..!! samugammedia

Tamil nila / Jan 1st 2024, 8:34 pm
image

Advertisement

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் வடகிழக்கு பிரதேசங்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இன்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றன.



அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவானது வெள்ள நீரினால் சூழப்பட்டிருந்த நிலையில் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ள நீர் வழிந்தோடிய நிலையில் குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து சுமூகமான நிலைக்கு வந்திருந்தது 

எனினும் குறித்த பகுதியில் சிராட்டி குளமானது மேலதிக நீரினை வெளியேற்றிய நிலையில், அந்த பகுதியில் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்பட்டிருந்த பிரதேச சபைக்கு சொந்தமான பாலமானது முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டிருந்தது 

இந்த நிலையில் குறித்த பாலத்தினை கிராம சேவகர் ஊடாக இன்றைய தினம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலை - பொதுமக்கள் ஒன்றிணைந்து சீர்திருத்தம். samugammedia கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் வடகிழக்கு பிரதேசங்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன.இன்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றன.அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவானது வெள்ள நீரினால் சூழப்பட்டிருந்த நிலையில் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் வெள்ள நீர் வழிந்தோடிய நிலையில் குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து சுமூகமான நிலைக்கு வந்திருந்தது எனினும் குறித்த பகுதியில் சிராட்டி குளமானது மேலதிக நீரினை வெளியேற்றிய நிலையில், அந்த பகுதியில் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்பட்டிருந்த பிரதேச சபைக்கு சொந்தமான பாலமானது முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டிருந்தது இந்த நிலையில் குறித்த பாலத்தினை கிராம சேவகர் ஊடாக இன்றைய தினம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement