• May 12 2024

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று: பல நாட்டு சிறப்பு விருந்தினர்களுடன் காலிமுகத்திடலில் நிகழ்வு

Chithra / Feb 4th 2023, 7:01 am
image

Advertisement

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று சனிக்கிழமை (04) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொள்வதற்கான பல முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.

சர்வமத வழிபாடுகள்


சுதந்திர தின நிகழ்வுகள் சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து காலை 6.30 க்கு ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய பௌத்த மத வழிபாடு பொல்வத்தை தர்ம கீர்த்தியாராமையிலும், இந்து மத வழிபாடுகள் கொழும்பு 4 புதிய கதிரேசன் ஆலயத்திலும் , இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் , கத்தோலிக்க மத வழிபாடுகள் மருதானை பாதிமா தேவாலயத்திலும் , கிருஸ்தவ மத வழிபாடுகள் கொழும்பு 1 , காலி முகத்திடல் - கிருஸ்தவ தேவாலயத்திலும் இடம்பெறவுள்ளன.

மரியாதை அணிவகுப்பு


சுதந்திர நிகழ்வில் முப்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை வீரர்கள், அங்கவீனமுற்ற முன்னாள் படை வீரர்கள், தேசிய மாணவர் படையணி என்பவற்றில் 6410 படை வீரர்களின் மரியாதை அணி வகுப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு 108 வாகனங்களின் வாகன பேரணியும் இடம்பெறவுள்ளது.

கடற்படையில் 7 படைப்பிரிவுகளைச்சேர்ந்த 58 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 1001 கடற்படை வீரர்கள் இம்மரியாதை அணி வகுப்பில் பங்குபற்றவுள்ளனர்.

அத்தோடு நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரின் 25 மரியாதை வேட்டுக்கள் தீர்த்தலும் இடம்பெறவுள்ளது. இதற்காக கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இதே போன்று விமானப்படையின் அனைத்து படையணிகளையும் உள்ளடக்கி 650 விமானப்படை வீரர்கள் மரியாதை அணிவகுப்பில் பங்குபற்றவுள்ளதோடு , 27 விமானப்படை வாகனங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் நிறைவில் பரஷூட் சாகம் இடம்பெறவுள்ளதோடு , இதில் 40 பரஷூட்கள் பங்குபற்றவுள்ளன.


பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 படையணிகளும், 220 விசேட அதிரடிப்படையினரும் மரியாதை அணி வகுப்பில் பங்குபற்றவுள்ளனர். இம்மரியாதை அணி வகுப்புக்கள் காலை 7.30க்கு ஆரம்பமாகி முற்பகல் 10.30 வரை இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி வருகை

நிகழ்வுகள் ஆரம்பமானதன் பின்னர் காலை 8.15 க்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதற்பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெறும். 

ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வார்.


ஜனாதிபதியின் உரை இடம்பெறாது

வருடாந்தம் சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதியின் உரை இடம்பெறுவது சம்பிரதாயபூர்வமானதாகும். எனினும் இம்முறை நேர முகாமைத்துவத்தைக் கருத்திற் கொண்டு நிகழ்வின் போது ஜனாதிபதி உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் , பின்னர் நாட்டுக்கு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜதந்திரிகள் பங்கேற்பு

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுமார் 400 இராஜதந்திரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்லண்ட், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள், பூட்டான் கல்வி அமைச்சர் மற்றும் ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.


இதே வேளை கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழிலும் தேசிய கீதம்


கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இம்முறை நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும் , நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் வீதிகள்

வெள்ளிக்கிழமை (03) பகல் 2 மணிமுதல் சனிக்கிழமை (04) சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை காலி வீதி, சாரணர் வீதி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையான வீதி மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை முற்பகல் 10 மணிவரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுபிட்டி சந்திவரை கடற்கரை வீதியும் மூடப்பட்டிருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.


சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்தவுடன் வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று: பல நாட்டு சிறப்பு விருந்தினர்களுடன் காலிமுகத்திடலில் நிகழ்வு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று சனிக்கிழமை (04) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதில் கலந்து கொள்வதற்கான பல முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.சர்வமத வழிபாடுகள்சுதந்திர தின நிகழ்வுகள் சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து காலை 6.30 க்கு ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய பௌத்த மத வழிபாடு பொல்வத்தை தர்ம கீர்த்தியாராமையிலும், இந்து மத வழிபாடுகள் கொழும்பு 4 புதிய கதிரேசன் ஆலயத்திலும் , இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் , கத்தோலிக்க மத வழிபாடுகள் மருதானை பாதிமா தேவாலயத்திலும் , கிருஸ்தவ மத வழிபாடுகள் கொழும்பு 1 , காலி முகத்திடல் - கிருஸ்தவ தேவாலயத்திலும் இடம்பெறவுள்ளன.மரியாதை அணிவகுப்புசுதந்திர நிகழ்வில் முப்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை வீரர்கள், அங்கவீனமுற்ற முன்னாள் படை வீரர்கள், தேசிய மாணவர் படையணி என்பவற்றில் 6410 படை வீரர்களின் மரியாதை அணி வகுப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு 108 வாகனங்களின் வாகன பேரணியும் இடம்பெறவுள்ளது.கடற்படையில் 7 படைப்பிரிவுகளைச்சேர்ந்த 58 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 1001 கடற்படை வீரர்கள் இம்மரியாதை அணி வகுப்பில் பங்குபற்றவுள்ளனர்.அத்தோடு நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரின் 25 மரியாதை வேட்டுக்கள் தீர்த்தலும் இடம்பெறவுள்ளது. இதற்காக கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன.இதே போன்று விமானப்படையின் அனைத்து படையணிகளையும் உள்ளடக்கி 650 விமானப்படை வீரர்கள் மரியாதை அணிவகுப்பில் பங்குபற்றவுள்ளதோடு , 27 விமானப்படை வாகனங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.நிகழ்வின் நிறைவில் பரஷூட் சாகம் இடம்பெறவுள்ளதோடு , இதில் 40 பரஷூட்கள் பங்குபற்றவுள்ளன.பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 படையணிகளும், 220 விசேட அதிரடிப்படையினரும் மரியாதை அணி வகுப்பில் பங்குபற்றவுள்ளனர். இம்மரியாதை அணி வகுப்புக்கள் காலை 7.30க்கு ஆரம்பமாகி முற்பகல் 10.30 வரை இடம்பெறவுள்ளன.ஜனாதிபதி வருகைநிகழ்வுகள் ஆரம்பமானதன் பின்னர் காலை 8.15 க்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதற்பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெறும். ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வார்.ஜனாதிபதியின் உரை இடம்பெறாதுவருடாந்தம் சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதியின் உரை இடம்பெறுவது சம்பிரதாயபூர்வமானதாகும். எனினும் இம்முறை நேர முகாமைத்துவத்தைக் கருத்திற் கொண்டு நிகழ்வின் போது ஜனாதிபதி உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் , பின்னர் நாட்டுக்கு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.இராஜதந்திரிகள் பங்கேற்புசுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுமார் 400 இராஜதந்திரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்லண்ட், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள், பூட்டான் கல்வி அமைச்சர் மற்றும் ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.இதே வேளை கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழிலும் தேசிய கீதம்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது.எனினும் இம்முறை நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும் , நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மூடப்படும் வீதிகள்வெள்ளிக்கிழமை (03) பகல் 2 மணிமுதல் சனிக்கிழமை (04) சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை காலி வீதி, சாரணர் வீதி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையான வீதி மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை முற்பகல் 10 மணிவரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுபிட்டி சந்திவரை கடற்கரை வீதியும் மூடப்பட்டிருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்தவுடன் வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement