• Jun 27 2024

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுளில் நிகழ்ந்த மாற்றம்!

Chithra / Feb 4th 2023, 7:06 am
image

Advertisement

இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய இடங்களான கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொள்வதற்கான பல முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுளில் நிகழ்ந்த மாற்றம் இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய இடங்களான கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதில் கலந்து கொள்வதற்கான பல முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement