இஸ்ரேல் - லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையில் நாளாந்தம் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் லெபனானில் யுத்தமொன்றை விரும்பவில்லை எனினும் லெபனானை கற்காலத்திற்கு அனுப்ப முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வோசிங்டனிற்கான விஜயத்தின்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இதனை தெரிவித்துள்ளார்.
தனது நாட்டினால் லெபனானை கற்காலத்தினை நோக்கி தள்ள முடியும் ஆனால் அதனை செய்ய விரும்பவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் நாங்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் எங்களை தயார்படுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தமொன்றை ஆரம்பித்தால் லெபனானிற்கு எங்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பது ஹெஸ்புல்லா அமைப்பிற்கு தெரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்தது முதல் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் கடந்த சில வாரங்களாக இந்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.
இதை தொடர்ந்து முழுமையான யுத்தம் குறித்த அச்சம் உருவாகியுள்ள நிலையில் இஸ்ரேல் லெபனானை தாக்குவது குறித்து எச்சரித்துள்ளதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரும் பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹெஸ்புல்லா- இஸ்ரேல் மோதல்கள் முழுமையான யுத்தமாக வெடிப்பதை அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல் நாடுகள் விரும்பவில்லை.
இது தொடர்பில் லெபனான் இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினருடனும் அமெரிக்கா தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வோசிங்டனில் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லெபனானை மீண்டும் கற்காலத்திற்கு அனுப்புவோம்- எச்சரிக்கும் இஸ்ரேல் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையில் நாளாந்தம் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் லெபனானில் யுத்தமொன்றை விரும்பவில்லை எனினும் லெபனானை கற்காலத்திற்கு அனுப்ப முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வோசிங்டனிற்கான விஜயத்தின்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இதனை தெரிவித்துள்ளார்.தனது நாட்டினால் லெபனானை கற்காலத்தினை நோக்கி தள்ள முடியும் ஆனால் அதனை செய்ய விரும்பவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் நாங்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் எங்களை தயார்படுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தமொன்றை ஆரம்பித்தால் லெபனானிற்கு எங்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பது ஹெஸ்புல்லா அமைப்பிற்கு தெரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்தது முதல் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் கடந்த சில வாரங்களாக இந்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.இதை தொடர்ந்து முழுமையான யுத்தம் குறித்த அச்சம் உருவாகியுள்ள நிலையில் இஸ்ரேல் லெபனானை தாக்குவது குறித்து எச்சரித்துள்ளதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரும் பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஹெஸ்புல்லா- இஸ்ரேல் மோதல்கள் முழுமையான யுத்தமாக வெடிப்பதை அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல் நாடுகள் விரும்பவில்லை.இது தொடர்பில் லெபனான் இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினருடனும் அமெரிக்கா தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வோசிங்டனில் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.