• Jun 30 2024

தோல்வியை வெற்றியாக காட்டும் ஜனாதிபதியின் செயல் அருவருக்கத்தக்கது - சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு...!

Anaath / Jun 27th 2024, 7:28 pm
image

Advertisement

இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கிய போதும் தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள உரையில் தெரிவித்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

1941 இலிருந்து இன்றுவரை இந்த அரசங்கத்திற்கு    உபரி நிதியாக நிதி கிடைக்கவில்லை என்கின்ற போது 1977 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை யுத்தம் நடத்தியது அரசாங்கம். ஒரு யுத்தத்துக்காக அரசாங்கம் செலவு செய்த தொகை என்பது ஆயுதங்கள், விமானங்கள், ஆட்டலறிகள். விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு மாத்திரம் 250 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலவு செய்திருப்பதாக இந்தியாவில் இருக்கின்ற  ஒருவர் மேற்கொண்ட  ஆய்வில் அதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கென  250 பில்லியன் டொலர்களுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட போதும்  அதனால் அளிக்கப்பட்ட தொகை பல பில்லியன்கள் பெறுமதியுடையது.  ஆகவே 1977 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை உபரி நிதி இல்லை என்று சொன்னால் இதனை  ரணில் விக்கிரமசிங்க முதலாவதாக விளங்கிக்கொள்ள வேண்டும்.  நாட்டில் மிக பாரிய ஒரு பிரச்சனை  நடைபெற்றது. அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருந்ததன் காரணமாக இந்த நாடு எவ்வளவு தூரம் இந்த நிதி நிலைமைகளிலிருந்து அவதிப்பட்டது என்பதை ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக்கொள்வதாக தோன்றுவதாக முதல் தடவையாக நம்புகின்றேன் 

அவர் சொல்லியிருக்கிற இன்னுமொரு  விடயம் என்னவென்றால்  இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கு.  ஆனால்  16 முறை கடன் வாங்கியும் தோல்வியில் முடிந்ததாக அவர் நேற்றைய தினம் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஒவ்வொரு முறையும் அபிவிருத்திக்காக வாங்கிய கடனை  சரியான முறையில் செலவு செய்யப்படாமல் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அதாவது இந்த நாடு நிதி நிலையில் வங்குரோத்து அடைந்ததாக   கடன்களை  செலுத்த முடியாது என 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னர் இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் இலங்கை  அரசாங்கத்துக்கு நிதி உதவி செய்கின்றது. இப்பொழுது செய்யப்பட்ட நிதி உதவியின் காரணமாக நாங்கள் வெற்றியடைந்திருக்கிறோம். 

எப்படி வெற்றியடைந்திருக்கிறோம் என்று சொன்னால் சர்வதேச நாணய நிதியம் சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார்கள்.  உங்களுக்கு வரிகளை கூட்டுவது. வாழ்க்கை செலவை அதிகரிப்பது. வரிகளை கூட்டுவதனூடாக தங்களது இருப்பை, நாணய இருப்பை அதிகரித்துக்கொள்வது. அவர்கள் மேற்கொண்ட வெற்றி என்பது  இந்த நாட்டில் 60 வீதத்துக்கு மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்கு கீழே போயிருக்கிறார்கள். வறுமைக்கூட்டுக்கு கீழே போனதற்கான முக்கிய கரணம் என்னவென்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் அவ்வாறானதொரு நிலைக்கு போயிருக்கிறது. அதனை ஐ.நா சபையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இதனை ஒரு வெற்றியாக ஜனாதிபதி பிரகடனப்படுத்துவது அருவருக்கத்தக்கதான ஒரு விடயமாக தான் தோன்றுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியை வெற்றியாக காட்டும் ஜனாதிபதியின் செயல் அருவருக்கத்தக்கது - சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு. இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கிய போதும் தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள உரையில் தெரிவித்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1941 இலிருந்து இன்றுவரை இந்த அரசங்கத்திற்கு    உபரி நிதியாக நிதி கிடைக்கவில்லை என்கின்ற போது 1977 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை யுத்தம் நடத்தியது அரசாங்கம். ஒரு யுத்தத்துக்காக அரசாங்கம் செலவு செய்த தொகை என்பது ஆயுதங்கள், விமானங்கள், ஆட்டலறிகள். விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு மாத்திரம் 250 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலவு செய்திருப்பதாக இந்தியாவில் இருக்கின்ற  ஒருவர் மேற்கொண்ட  ஆய்வில் அதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கென  250 பில்லியன் டொலர்களுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட போதும்  அதனால் அளிக்கப்பட்ட தொகை பல பில்லியன்கள் பெறுமதியுடையது.  ஆகவே 1977 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை உபரி நிதி இல்லை என்று சொன்னால் இதனை  ரணில் விக்கிரமசிங்க முதலாவதாக விளங்கிக்கொள்ள வேண்டும்.  நாட்டில் மிக பாரிய ஒரு பிரச்சனை  நடைபெற்றது. அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருந்ததன் காரணமாக இந்த நாடு எவ்வளவு தூரம் இந்த நிதி நிலைமைகளிலிருந்து அவதிப்பட்டது என்பதை ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக்கொள்வதாக தோன்றுவதாக முதல் தடவையாக நம்புகின்றேன் அவர் சொல்லியிருக்கிற இன்னுமொரு  விடயம் என்னவென்றால்  இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கு.  ஆனால்  16 முறை கடன் வாங்கியும் தோல்வியில் முடிந்ததாக அவர் நேற்றைய தினம் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஒவ்வொரு முறையும் அபிவிருத்திக்காக வாங்கிய கடனை  சரியான முறையில் செலவு செய்யப்படாமல் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அதாவது இந்த நாடு நிதி நிலையில் வங்குரோத்து அடைந்ததாக   கடன்களை  செலுத்த முடியாது என 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னர் இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் இலங்கை  அரசாங்கத்துக்கு நிதி உதவி செய்கின்றது. இப்பொழுது செய்யப்பட்ட நிதி உதவியின் காரணமாக நாங்கள் வெற்றியடைந்திருக்கிறோம். எப்படி வெற்றியடைந்திருக்கிறோம் என்று சொன்னால் சர்வதேச நாணய நிதியம் சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார்கள்.  உங்களுக்கு வரிகளை கூட்டுவது. வாழ்க்கை செலவை அதிகரிப்பது. வரிகளை கூட்டுவதனூடாக தங்களது இருப்பை, நாணய இருப்பை அதிகரித்துக்கொள்வது. அவர்கள் மேற்கொண்ட வெற்றி என்பது  இந்த நாட்டில் 60 வீதத்துக்கு மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்கு கீழே போயிருக்கிறார்கள். வறுமைக்கூட்டுக்கு கீழே போனதற்கான முக்கிய கரணம் என்னவென்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் அவ்வாறானதொரு நிலைக்கு போயிருக்கிறது. அதனை ஐ.நா சபையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இதனை ஒரு வெற்றியாக ஜனாதிபதி பிரகடனப்படுத்துவது அருவருக்கத்தக்கதான ஒரு விடயமாக தான் தோன்றுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement