அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினமும் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்க வேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயக ரீதியான இன்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினமும்(27) அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது.
அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்று போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நாளைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும். இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு. அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினமும் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்க வேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயக ரீதியான இன்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினமும்(27) அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது. அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்று போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நாளைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.