• Jun 29 2024

கும்பலொன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை; 24 நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்த நபர்! கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Jun 26th 2024, 3:59 pm
image

Advertisement

 

கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 2ம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில்,  

தன்னை  அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது  தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார்,

அங்கு  சாட்சியங்களைப்  பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கும்பலொன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை; 24 நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்த நபர் கிளிநொச்சியில் சம்பவம்  கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.குறித்த நபர் கடந்த 2ம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில்,  தன்னை  அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது  தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார்,அங்கு  சாட்சியங்களைப்  பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில்  குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement