• Sep 20 2024

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை : அதிகரிக்கும் மோசடிகள்!

Tamil nila / Jan 10th 2023, 6:27 pm
image

Advertisement

வெளிநாட்டில், வேலை பெற்றுத்தருவதாக கூறி நடைபெறும் மோசடிகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.


திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு துபாயில் தொழில் வழங்குவதாகக் கூறி 450,000 ரூபா பெற்றுக்கொடுத்து வேலை வழங்கவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரும் முகாமையாளரும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சரணடைந்ததுடன் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டனர்.


திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட 450,000 ரூபா பணத்தை இரண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு உரிமையாளர் மற்றும் முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை பெறுமாறும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை : அதிகரிக்கும் மோசடிகள் வெளிநாட்டில், வேலை பெற்றுத்தருவதாக கூறி நடைபெறும் மோசடிகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு துபாயில் தொழில் வழங்குவதாகக் கூறி 450,000 ரூபா பெற்றுக்கொடுத்து வேலை வழங்கவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரும் முகாமையாளரும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சரணடைந்ததுடன் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டனர்.திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட 450,000 ரூபா பணத்தை இரண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு உரிமையாளர் மற்றும் முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை பெறுமாறும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement