• May 17 2024

பண்டிகை கால வியாபாரத்தில் பல லட்சங்களை சுருட்டிய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம்

Chithra / Jan 10th 2023, 6:34 pm
image

Advertisement

மன்னார் நகரசபை வீதிகளில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட பண்டிகை கால வியாபார நிலையங்களுக்கான மின் விநியோகத்தில் பல லட்சங்களை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளது

மன்னார் நகரசபை எல்லைக்குள் ஆண்டு தோறும் இடம்பெறும் பண்டிகை கால வியாபர விற்பனையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபரிகள்  கடைகளை குத்தகைக்கு பெற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை.

இம்முறை அவ்வாறு வருகை தந்த வியாபாரிகளிடன் மின் கட்டணம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பணத்தை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளது.

இம் முறை மன்னார் நகர் பகுதியில் 300 வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் காலை ஆறு மணிதொடக்கம் நள்ளிரவு ஒரு மணிவரை மின்சாரம் வழங்குவதற்கு ஒவ்வொரு வியாபர நிலையத்திற்கும் ஒரு மின்குமிழுக்கு 250 ரூபா விதம் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் வசூலித்துள்ளது.

ஒவ்வொரு கடைகளிலும் 2 தொடக்கம் 10 மின் குமிழ் வரை பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடை ஒன்றுக்குக்கு இரண்டு மின் குமிழ் வீதம் 600 மின் குமிழுக்கு நாள் ஒன்றுக்கு மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் 150000(ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது இவ்வாறு 300 கடைகளிலும் 12 நாட்கள் வசூல் வேட்டை நடத்திய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் மொத்தமாக நாளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீதம் பன்னிரெண்டு நாட்களுக்கு 1,800,000 பதினெட்டு இலட்சம் ரூபா மேல்  வசூலித்துள்ளது.

அவ்வாறு விற்பனையாளர்களிடம் பணம் வசூலித்தமைக்கு எந்த ஒரு பற்று சீட்டும் வழங்காமல் நகரசபையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மன்னார் நகரசபை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பண வசூலி ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மின்சார சபையின் ஊடாக குறித்த பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என வழங்கப்பட்ட உப மின் வழங்களில் வெறுமனே 2012 மின் அலகுகளே வியாபரிகளால் பாவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பாவனைக்கு மன்னார் மின்சார சபையின் மின்கட்டணம் வெறுமனே 64000 ரூபா மாத்திரமே ஆனாலும் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம்  செலவை பார்கிலும் 17 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாய்களை ஏழை வியாபரிகளிடம் இருந்து சுருட்டியுள்ளது.

ஆண்டு தோறும் இவ்வாறாக பண்டிகை கால வியாபாரங்களிலும் குத்தகைக்கு வழங்கப்படாத கடைகள் ஊடாக வசூலிக்கப்பட்டும் பணத்தை கொண்டும் இவ்வாறான மின் வசூலிப்புக்கள் ஊடக கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டும் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் வருடாந்த விடுமுறை கொண்டாட்டங்கள், சுற்றுலா, பிரியாவிடை நிகழ்வுகள், Tshart போன்றவை தயாரிப்பதற்கு அந்த பணத்தை  பயன்படுத்தி வருகின்றது.

அதேபோல் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் வாகன வாடகை, மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான விடுதி,மற்றும் கட்டிடம் களஞ்சிய சாலைகளை வியாபாரிகளுக்கு வாடகைக்கு வழங்கி பல லட்சம் ரூபா பண வசூலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பண்டிகை கால வியாபாரத்தில் பல லட்சங்களை சுருட்டிய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் மன்னார் நகரசபை வீதிகளில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட பண்டிகை கால வியாபார நிலையங்களுக்கான மின் விநியோகத்தில் பல லட்சங்களை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளதுமன்னார் நகரசபை எல்லைக்குள் ஆண்டு தோறும் இடம்பெறும் பண்டிகை கால வியாபர விற்பனையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபரிகள்  கடைகளை குத்தகைக்கு பெற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை.இம்முறை அவ்வாறு வருகை தந்த வியாபாரிகளிடன் மின் கட்டணம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பணத்தை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளது.இம் முறை மன்னார் நகர் பகுதியில் 300 வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் காலை ஆறு மணிதொடக்கம் நள்ளிரவு ஒரு மணிவரை மின்சாரம் வழங்குவதற்கு ஒவ்வொரு வியாபர நிலையத்திற்கும் ஒரு மின்குமிழுக்கு 250 ரூபா விதம் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் வசூலித்துள்ளது.ஒவ்வொரு கடைகளிலும் 2 தொடக்கம் 10 மின் குமிழ் வரை பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடை ஒன்றுக்குக்கு இரண்டு மின் குமிழ் வீதம் 600 மின் குமிழுக்கு நாள் ஒன்றுக்கு மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் 150000(ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது இவ்வாறு 300 கடைகளிலும் 12 நாட்கள் வசூல் வேட்டை நடத்திய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் மொத்தமாக நாளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீதம் பன்னிரெண்டு நாட்களுக்கு 1,800,000 பதினெட்டு இலட்சம் ரூபா மேல்  வசூலித்துள்ளது.அவ்வாறு விற்பனையாளர்களிடம் பணம் வசூலித்தமைக்கு எந்த ஒரு பற்று சீட்டும் வழங்காமல் நகரசபையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மன்னார் நகரசபை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பண வசூலி ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் மின்சார சபையின் ஊடாக குறித்த பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என வழங்கப்பட்ட உப மின் வழங்களில் வெறுமனே 2012 மின் அலகுகளே வியாபரிகளால் பாவிக்கப்பட்டுள்ளது.அவர்களின் பாவனைக்கு மன்னார் மின்சார சபையின் மின்கட்டணம் வெறுமனே 64000 ரூபா மாத்திரமே ஆனாலும் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம்  செலவை பார்கிலும் 17 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாய்களை ஏழை வியாபரிகளிடம் இருந்து சுருட்டியுள்ளது.ஆண்டு தோறும் இவ்வாறாக பண்டிகை கால வியாபாரங்களிலும் குத்தகைக்கு வழங்கப்படாத கடைகள் ஊடாக வசூலிக்கப்பட்டும் பணத்தை கொண்டும் இவ்வாறான மின் வசூலிப்புக்கள் ஊடக கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டும் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் வருடாந்த விடுமுறை கொண்டாட்டங்கள், சுற்றுலா, பிரியாவிடை நிகழ்வுகள், Tshart போன்றவை தயாரிப்பதற்கு அந்த பணத்தை  பயன்படுத்தி வருகின்றது.அதேபோல் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் வாகன வாடகை, மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான விடுதி,மற்றும் கட்டிடம் களஞ்சிய சாலைகளை வியாபாரிகளுக்கு வாடகைக்கு வழங்கி பல லட்சம் ரூபா பண வசூலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement