• Nov 22 2024

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி - அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வரி இழப்பு

Chithra / Oct 6th 2024, 9:46 am
image

  

பதுளை பகுதியில் வர்த்தகர் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்றை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. 

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு ஜீப் ரக வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அரசாங்கத்திற்கு பாரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஜீப் ரக வாகனத்தைக் கடந்த 18 ஆம் திகதிக்கு முன்னதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

எனினும் அந்த உத்தரவை மீறியமை காரணமாகக் குறித்த வாகனத்தை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. 

அத்துடன் அந்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி - அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வரி இழப்பு   பதுளை பகுதியில் வர்த்தகர் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்றை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு ஜீப் ரக வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்திற்கு பாரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜீப் ரக வாகனத்தைக் கடந்த 18 ஆம் திகதிக்கு முன்னதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அந்த உத்தரவை மீறியமை காரணமாகக் குறித்த வாகனத்தை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. அத்துடன் அந்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement