• Sep 29 2024

இலங்கையில் நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்! வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் SamugamMedia

Chithra / Feb 25th 2023, 11:10 am
image

Advertisement

நாட்டின் சுகாதார சேவைகள் நிரம்பி வழியும் சூழலில், அரச வைத்தியசாலைகளில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்களின் கருத்து நிலவுவதாகவும், இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சகம் உடனடி ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


தற்சமயம், அன்றாட சுகாதாரத்திற்குத் தேவையான பரசிட்டமோல், இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை, கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், கல்லீரல் நோய்கள் போன்றவை உள்ளன.

மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக நீரிழிவு மற்றும் கல்லீரல் தொடர்பான சிக்கல்கள் அதிகரிப்பதன் காரணமாக நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கக்கூடும் என்றும், நீரிழிவு மற்றும் கல்லீரல் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.


இந்நிலைமைகளினால் நோயாளர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சுகாதார அமைச்சு நிலவும் கருத்தியலை புறந்தள்ளி செயற்படாமல் ஆபத்து தொடர்பில் ஆய்வு செய்து நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம் வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் SamugamMedia நாட்டின் சுகாதார சேவைகள் நிரம்பி வழியும் சூழலில், அரச வைத்தியசாலைகளில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார்.தற்போதைய நெருக்கடியில் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்களின் கருத்து நிலவுவதாகவும், இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சகம் உடனடி ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.தற்சமயம், அன்றாட சுகாதாரத்திற்குத் தேவையான பரசிட்டமோல், இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை, கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், கல்லீரல் நோய்கள் போன்றவை உள்ளன.மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக நீரிழிவு மற்றும் கல்லீரல் தொடர்பான சிக்கல்கள் அதிகரிப்பதன் காரணமாக நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கக்கூடும் என்றும், நீரிழிவு மற்றும் கல்லீரல் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.இந்நிலைமைகளினால் நோயாளர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சுகாதார அமைச்சு நிலவும் கருத்தியலை புறந்தள்ளி செயற்படாமல் ஆபத்து தொடர்பில் ஆய்வு செய்து நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement