• Jan 21 2025

ஜனாதிபதி அனுரவுடன் முக்கிய பேச்சுவார்த்தை – இலங்கைக்கு வருகிறார் ஜெய்சங்கர்!

Chithra / Sep 29th 2024, 8:48 am
image



இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி அனுரவுடன் முக்கிய பேச்சுவார்த்தை – இலங்கைக்கு வருகிறார் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement