• Oct 01 2024

சுற்றுலாத் துறையில் சாதனை படைத்த இலங்கை! samugamMedia

Chithra / Mar 15th 2023, 1:14 pm
image

Advertisement

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்றும் குறிப்பாக 12 ஆயிரத்து 762 ரஷ்ய பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியில் இருந்து 4,289 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,937 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,716 பேரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையில் சாதனை படைத்த இலங்கை samugamMedia மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்றும் குறிப்பாக 12 ஆயிரத்து 762 ரஷ்ய பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியில் இருந்து 4,289 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,937 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,716 பேரும் இலங்கை வந்துள்ளனர்.இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement