ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான தாமதங்கள், நாட்டின் தேசிய விமானப் பிராண்டிற்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களில் பல ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் சில விமான அட்டவணைகளில் தாமதங்கள் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையால் சிக்கல் – இன்று விசேட கலந்துரையாடல் samugammedia ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விமான தாமதங்கள், நாட்டின் தேசிய விமானப் பிராண்டிற்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சில நாட்களில் பல ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் சில விமான அட்டவணைகளில் தாமதங்கள் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.