• Oct 18 2024

பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Bus
Chithra / Oct 2nd 2023, 8:31 am
image

Advertisement

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் இந்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி. அல்விஸ் கூறியுள்ளார்.

தற்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனால், பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் இந்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி. அல்விஸ் கூறியுள்ளார்.தற்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement