சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் உள்ள பிரச்சினைகளின் காரணமாக பல சிக்கல்களை சந்தித்து வருவதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் காலதாமதம் மற்றும் பயணங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4 விமானங்கள் பழுதுபார்க்க வேண்டிய உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானங்கள் தரையில் வைக்க வேண்டியுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸில் கடந்த வருடம் மட்டும் போதிய விமானங்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த நிலைமை விமானங்களின் தாமதத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்பு 24 விமானங்களை கொண்டிருந்தது, அவற்றில் தற்போது 18 விமானங்கள் மட்டுமே பறக்கும் மட்டத்தில் உள்ளன.
மேலும், தற்போது பயன்பாட்டில் இல்லாத இரண்டு விமானங்களை திருப்பி அனுப்பிவிட்டு மூன்று புதிய விமானங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த கொள்முதல்களும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், பறக்கக்கூடிய நிலையிலுள்ள 4 விமானங்களுக்கும் மிகக் குறைந்த பழுது பார்க்கும் பணிகள் மாத்திரமே தேவைப்படுகின்றன.
அதனை பராமரித்தால், விமான அட்டவணைகளில் உள்ள பயணங்கள் இரத்து செய்யப்படுவதை கணிசமான அளவு கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ். ரத்து செய்யப்படும் பயணங்கள். சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் உள்ள பிரச்சினைகளின் காரணமாக பல சிக்கல்களை சந்தித்து வருவதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் காலதாமதம் மற்றும் பயணங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4 விமானங்கள் பழுதுபார்க்க வேண்டிய உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானங்கள் தரையில் வைக்க வேண்டியுள்ளது.சிறிலங்கன் எயார்லைன்ஸில் கடந்த வருடம் மட்டும் போதிய விமானங்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யப்பட்டிருந்தது.மேலும், இந்த நிலைமை விமானங்களின் தாமதத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளது.சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்பு 24 விமானங்களை கொண்டிருந்தது, அவற்றில் தற்போது 18 விமானங்கள் மட்டுமே பறக்கும் மட்டத்தில் உள்ளன.மேலும், தற்போது பயன்பாட்டில் இல்லாத இரண்டு விமானங்களை திருப்பி அனுப்பிவிட்டு மூன்று புதிய விமானங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த கொள்முதல்களும் வெற்றிபெறவில்லை.இந்நிலையில், பறக்கக்கூடிய நிலையிலுள்ள 4 விமானங்களுக்கும் மிகக் குறைந்த பழுது பார்க்கும் பணிகள் மாத்திரமே தேவைப்படுகின்றன.அதனை பராமரித்தால், விமான அட்டவணைகளில் உள்ள பயணங்கள் இரத்து செய்யப்படுவதை கணிசமான அளவு கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.