• Oct 04 2024

வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 1:44 pm
image

Advertisement

யாழ் வடமராட்சி கிழக்கு  பிரசித்தி பெற்ற  புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று இடம்பெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்று  காலை 07 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அச்சுவேலி பங்குத்தந்தை -மைக்கல் செளந்தர நாயகம் ஒப்புக் கொடுத்தார்.

வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக பொறுப்பாளர், தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்  றமேஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியை சிறப்பித்ததோடு திருப்பலி நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததோடு தங்களது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.



வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா.samugammedia யாழ் வடமராட்சி கிழக்கு  பிரசித்தி பெற்ற  புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று இடம்பெற்றது.சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்று  காலை 07 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அச்சுவேலி பங்குத்தந்தை -மைக்கல் செளந்தர நாயகம் ஒப்புக் கொடுத்தார்.வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக பொறுப்பாளர், தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்  றமேஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியை சிறப்பித்ததோடு திருப்பலி நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததோடு தங்களது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement