• Sep 10 2024

இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பமாகும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை

Chithra / Aug 13th 2024, 1:38 pm
image

Advertisement


ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka Private Limited க்கு செய்மதி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை வழங்கியுள்ளதாக அவ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, Starlink நிறுவனம் தனது செய்மதி இணையச் சேவை வெகுவிரைவில் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பமாகும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை ஸ்டார்லிங்க் லங்கா தனியார் நிறுவனத்திற்கு இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka Private Limited க்கு செய்மதி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை வழங்கியுள்ளதாக அவ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Starlink நிறுவனம் தனது செய்மதி இணையச் சேவை வெகுவிரைவில் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement