• Jun 28 2026

பாக்யராஜ் உடலுக்கு அரச மரியாதை; அப்பாவிடம் கடைசி ஆசீர்வாதம் பெற்ற சாந்தனு!

Chithra / Jun 28th 2026, 11:41 am
image


தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தனது தனித்திறமையால் பிரபலமானவர் பாக்யராஜ் 73 வயதில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ரசிகர்களின் மனநிலையை நுணுக்கமாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க்கைச் சம்பவங்களை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய திறமைக்காக இவர் “திரைக்கதை மன்னன்” என அழைக்கப்பட்டார்.


நேற்று அதிகாலை நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பாக்யராஜ், அப்போது வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.


அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.


இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டது. ஊர்வலத்தில் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.  


இறுதி ஊர்வலத்தின் போது, சாந்தனு தனது தந்தையின் ஊர்வலம் முன் விழுந்து கடைசி ஆசீர்வாதம் பெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து பெசண்ட் நகர் மின்மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட உள்ளது. பெசண்ட் நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாக்யராஜ் உடலுக்கு அரச மரியாதை; அப்பாவிடம் கடைசி ஆசீர்வாதம் பெற்ற சாந்தனு தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தனது தனித்திறமையால் பிரபலமானவர் பாக்யராஜ் 73 வயதில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்களின் மனநிலையை நுணுக்கமாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க்கைச் சம்பவங்களை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய திறமைக்காக இவர் “திரைக்கதை மன்னன்” என அழைக்கப்பட்டார்.நேற்று அதிகாலை நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பாக்யராஜ், அப்போது வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டது. ஊர்வலத்தில் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.  இறுதி ஊர்வலத்தின் போது, சாந்தனு தனது தந்தையின் ஊர்வலம் முன் விழுந்து கடைசி ஆசீர்வாதம் பெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து பெசண்ட் நகர் மின்மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட உள்ளது. பெசண்ட் நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement