• Sep 20 2024

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமனம்..!samugammedia

Sharmi / Jun 17th 2023, 9:35 am
image

Advertisement

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இவர்கள் மேற்கண்ட பதவியில் இருப்பார்கள்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமனம்.samugammedia பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இவர்கள் மேற்கண்ட பதவியில் இருப்பார்கள்.ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement