• May 19 2024

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்! samugammedia

Chithra / Jun 17th 2023, 9:40 am
image

Advertisement

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (07) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்றம் ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன் பி.ப 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்குப் பிரேரிக்கப்படும்.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

ஜூன் 21ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு ஆகியவை தொடர்பான விவாதம் என்பன இடம்பெறவுள்ளன.

பின்னர் பி.ப 5.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஜூன் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை கௌரவ சனாதிபதி அவர்களினால் 2023.06.01 அன்று பொதுமக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜூன் 23 வெள்ளிக்கிழமை முழுவதும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல் samugammedia பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (07) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார்.பாராளுமன்றம் ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.அத்துடன் பி.ப 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்குப் பிரேரிக்கப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.ஜூன் 21ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு ஆகியவை தொடர்பான விவாதம் என்பன இடம்பெறவுள்ளன.பின்னர் பி.ப 5.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை கௌரவ சனாதிபதி அவர்களினால் 2023.06.01 அன்று பொதுமக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.ஜூன் 23 வெள்ளிக்கிழமை முழுவதும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement