• Nov 28 2024

இலங்கையில் பல கோடி ரூபா பெறுமதியான அரச சொத்துக்களை மாயம்..! உதய கம்மன்பில குற்றச்சாட்டு

Chithra / Jan 23rd 2024, 9:37 am
image

 

இலங்கையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5.5 ட்ரில்லியன் ரூபா (553000 கோடி ரூபா) பெறுமதியான அரச சொத்துக்கள் காணாமல் போயுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களில் இவ்வாறு 5.5 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரச ஆவணங்களில் பதியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கார் ஒன்றை கொள்வனவு செய்ய நூறு இலட்சம் ரூபா செலவிட்டால் அரச சொத்துக்கள் நூறு இலட்சத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் பாடசாலை கட்டடமொன்றை அமைத்தால் அதுவும் அரச சொத்து அதிகரிப்பாக பதிவிடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிட்ட தொகையில் 68 வீதமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இல்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2013ம் ஆண்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகைகளில் 94 வீதமானவை பற்றிய பதிவுகள் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார். 


இலங்கையில் பல கோடி ரூபா பெறுமதியான அரச சொத்துக்களை மாயம். உதய கம்மன்பில குற்றச்சாட்டு  இலங்கையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5.5 ட்ரில்லியன் ரூபா (553000 கோடி ரூபா) பெறுமதியான அரச சொத்துக்கள் காணாமல் போயுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களில் இவ்வாறு 5.5 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரச ஆவணங்களில் பதியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் கார் ஒன்றை கொள்வனவு செய்ய நூறு இலட்சம் ரூபா செலவிட்டால் அரச சொத்துக்கள் நூறு இலட்சத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.அரசாங்கம் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் பாடசாலை கட்டடமொன்றை அமைத்தால் அதுவும் அரச சொத்து அதிகரிப்பாக பதிவிடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கம் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிட்ட தொகையில் 68 வீதமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இல்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.குறிப்பாக 2013ம் ஆண்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகைகளில் 94 வீதமானவை பற்றிய பதிவுகள் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement