கிழக்கில் நேற்று மாலை சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் ஆயுதப்படையினரின் முயற்சிகளை பாராட்டினார்.
''பெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, உயிர்களைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்.
குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்களின் அயராத முயற்சிகள் எப்போதும் பாராட்டத்தக்கவை.
நேற்று மாலை கிழக்கில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகமான சம்பவத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.
ஓட்டுநர் மற்றும், 5 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பிறரைத் தேடும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன,” என்று அவர் தனது X இல் பதிவிட்டார்.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மற்றும் தங்குமிடங்களின் அவசியத்தை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் கூறினார்.
மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அநுர அரசை கோரும் நாமல் கிழக்கில் நேற்று மாலை சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கும் ஆயுதப்படையினரின் முயற்சிகளை பாராட்டினார்.''பெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, உயிர்களைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்களின் அயராத முயற்சிகள் எப்போதும் பாராட்டத்தக்கவை.நேற்று மாலை கிழக்கில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகமான சம்பவத்தைக் கண்டு நான் வருந்துகிறேன். ஓட்டுநர் மற்றும், 5 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பிறரைத் தேடும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன,” என்று அவர் தனது X இல் பதிவிட்டார்.வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மற்றும் தங்குமிடங்களின் அவசியத்தை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் கூறினார்.