• Nov 24 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை - ஜனாதிபதி அநுர திட்டம்

Chithra / Nov 9th 2024, 9:33 am
image

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களது உறவினர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.

அவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென எண்ணுகின்றார்கள். 

நாட்டை கட்டியெழுப்பும் வரையில் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது. 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கை போன்றவற்றின் ஊடாக பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அவ்வாறானவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை - ஜனாதிபதி அநுர திட்டம்  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களது உறவினர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.அவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென எண்ணுகின்றார்கள். நாட்டை கட்டியெழுப்பும் வரையில் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வழங்கப்படுகின்றன.இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கை போன்றவற்றின் ஊடாக பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறானவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement