• Dec 03 2024

டிசம்பர் முதல் தடையின்றி திரிபோஷா விநியோகிக்க நடவடிக்கை! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 7:28 am
image

திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அடுத்த மாதம் முதல் தடையில்லாமல் திரிபோஷா விநியோகிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு திரிபோஷா வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது. ஆகவே திரிபோஷா விநியோகம் மீண்டும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் முதல் தடையின்றி திரிபோஷா விநியோகிக்க நடவடிக்கை samugammedia திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அடுத்த மாதம் முதல் தடையில்லாமல் திரிபோஷா விநியோகிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பதிலளித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு திரிபோஷா வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது. ஆகவே திரிபோஷா விநியோகம் மீண்டும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement