• Jan 11 2025

தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Chithra / Jan 6th 2025, 7:48 am
image

 

ஹொரணை பெருந்தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹொம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு வெயிலிலும், மழையிலும் பாதிப்பின்றி இலகுவாக தேயிலை கொழுந்து பறிப்பதற்காக இந்த குடை, அறிமுகம் செய்யப்பட்டதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து முன்னோடி திட்டமாக இந்த குடை உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறித்த குடையை அணிவதன் மூலம் தேயிலை இலைகளை பறிப்பது எளிது என தொழிலாளர்கள் கூறுகின்றனர். 

ஒரு குடையின் விலை 1600 ரூபாய் என்று கூறப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் இதன் மூலம் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நடவடிக்கையின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குடைக்கான காப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை  ஹொரணை பெருந்தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹொம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய குடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு வெயிலிலும், மழையிலும் பாதிப்பின்றி இலகுவாக தேயிலை கொழுந்து பறிப்பதற்காக இந்த குடை, அறிமுகம் செய்யப்பட்டதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.தோட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து முன்னோடி திட்டமாக இந்த குடை உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். குறித்த குடையை அணிவதன் மூலம் தேயிலை இலைகளை பறிப்பது எளிது என தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு குடையின் விலை 1600 ரூபாய் என்று கூறப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் இதன் மூலம் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குடைக்கான காப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தோட்ட அத்தியட்சகர் நதீர குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement