• Sep 20 2024

கொழும்பில் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை..!

Sharmi / Jul 31st 2024, 11:12 am
image

Advertisement

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

வீதிகளில் வாகன தரிப்பிடத்தை நிர்வகிப்பதற்கு ஒப்பந்ததாரர் மற்றும் நிர்வாகி நியமிக்கும் தற்போதைய முறைக்கு பதிலாக ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து திணைக்கள பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

அதேவேளை, சுமார் 3 மாதங்களில் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

அத்துடன், இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால், அந்தந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதியை ஓட்டுநர்கள் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, எதிர்காலத்தில் வாகன நிறுத்துமிடங்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து திணைக்கள பிரதி பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.வீதிகளில் வாகன தரிப்பிடத்தை நிர்வகிப்பதற்கு ஒப்பந்ததாரர் மற்றும் நிர்வாகி நியமிக்கும் தற்போதைய முறைக்கு பதிலாக ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து திணைக்கள பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.அதேவேளை, சுமார் 3 மாதங்களில் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.அத்துடன், இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால், அந்தந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதியை ஓட்டுநர்கள் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, எதிர்காலத்தில் வாகன நிறுத்துமிடங்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து திணைக்கள பிரதி பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement