• Nov 17 2024

முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு!

Chithra / Jun 9th 2024, 12:46 pm
image



போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துவரும் விழிப்புணர்வுக்காக,

முச்சக்கர வண்டிகளுக்கு  107 அவசர தொலைபேசி இலக்கம் அச்சிடும் நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை இனம் கண்டால் உடனடியாக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு,

தகவலை பரிமாறும் போது விற்பனை செய்யும் முகவர்களை தடுத்து போதையற்ற பிரதேசமாக, மாவட்டமாக, நாடாக மாற்றலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான வேலை திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.



முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துவரும் விழிப்புணர்வுக்காக,முச்சக்கர வண்டிகளுக்கு  107 அவசர தொலைபேசி இலக்கம் அச்சிடும் நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை இனம் கண்டால் உடனடியாக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு,தகவலை பரிமாறும் போது விற்பனை செய்யும் முகவர்களை தடுத்து போதையற்ற பிரதேசமாக, மாவட்டமாக, நாடாக மாற்றலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான வேலை திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement