• Nov 23 2024

மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல்: வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jun 28th 2024, 8:54 am
image


மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று  கொழும்பில்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

என்றாலும் பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க முடியாத நிலையே இருந்து வந்தது.

இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் நற்செய்தி தெரிவிக்கப்போவதை அறிந்து, அதனை திசை திருப்பும் நோக்கில், மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் தொழிற்சங்கம் போராட்டம் மேற்கொண்டது.

யாருக்கும் மேண்டுமானாலும் அவர்களின் உரிமைக்காக போராட்டம் மேற்கொள்ளலாம். அதில் தவறு இல்லை. 

என்றாலும் இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாலே காவல்துறையினர் நீர் தாரை, கண்ணிர்புகை அடித்து, அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இது மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல். எனவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதன் மூலம் அனைத்து பரீட்சைகளும் பின்தள்ளப்படும் நிலை ஏற்படும். இனால் மாணவர்களே பாதிக்கப்படப்போகிறார்கள் என்றார்.

மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல்: வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று  கொழும்பில்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.என்றாலும் பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க முடியாத நிலையே இருந்து வந்தது.இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் நற்செய்தி தெரிவிக்கப்போவதை அறிந்து, அதனை திசை திருப்பும் நோக்கில், மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் தொழிற்சங்கம் போராட்டம் மேற்கொண்டது.யாருக்கும் மேண்டுமானாலும் அவர்களின் உரிமைக்காக போராட்டம் மேற்கொள்ளலாம். அதில் தவறு இல்லை. என்றாலும் இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாலே காவல்துறையினர் நீர் தாரை, கண்ணிர்புகை அடித்து, அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.இது மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல். எனவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதன் மூலம் அனைத்து பரீட்சைகளும் பின்தள்ளப்படும் நிலை ஏற்படும். இனால் மாணவர்களே பாதிக்கப்படப்போகிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement