• Feb 06 2025

திருகோணமலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுக்க வீதி நாடகம்

Tharmini / Dec 8th 2024, 11:50 am
image

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை நமது சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் மற்றும் கேட்கப்படும், தினமும் செய்திகளில் இடம் பெறும் ஒரு சம்பவமாக உள்ளது.

இது தொடர்பாக, நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுடன் மற்றும் தெரு நாடக கண்காட்சி ஆகியவை 16 நாட்களுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி நடை பெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்ட நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்றது, 

இந் நிகழ்வின் போதுநேரத்தில் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

குறித்த நிகழ்வின் போது நடை பவணி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வீதி நாடகமும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வை மாவட்ட செயலக  பெண்கள் விவகார பிரிவு மற்றும் பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் ஏற்பாடு செய்தன.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






திருகோணமலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுக்க வீதி நாடகம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை நமது சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் மற்றும் கேட்கப்படும், தினமும் செய்திகளில் இடம் பெறும் ஒரு சம்பவமாக உள்ளது.இது தொடர்பாக, நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுடன் மற்றும் தெரு நாடக கண்காட்சி ஆகியவை 16 நாட்களுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி நடை பெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்ட நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்றது, இந் நிகழ்வின் போதுநேரத்தில் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.குறித்த நிகழ்வின் போது நடை பவணி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வீதி நாடகமும் இடம் பெற்றது.இந்த நிகழ்வை மாவட்ட செயலக  பெண்கள் விவகார பிரிவு மற்றும் பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் ஏற்பாடு செய்தன.இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement