ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் பேரழிவு மற்றும் போக்குவரத்து ஒழுக்கம் ஆகியவையே பொலிஸ் திணைக்களம் எதிர்கொள்ளும் மூன்று பிரதான சவால்கள் என பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள மனித வள அபிவிருத்தி, அதிகாரிகளின் ஆளுமை விருத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போது பொலிஸ் திணைக்களத்தில் 38,000 முதல் 40,000 வரையிலான அதிகாரிகள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், 10,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சுமார் 1,500 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் 950 பேரை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரிகளின் ஒழுக்கம் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நீண்டகாலமாக நிலவி வந்த பதவி உயர்வு தாமதப் பிரச்சினையை இந்த வருடத்திற்குள் முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பொலிஸ் சேவையை உருவாக்குவதே முக்கியம் என வலியுறுத்திய பொலிஸ்மா அதிபர், அதற்காக அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த விசேட பயிற்சிகளும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்தொன்றுடன் தொடர்புடையதாகக் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கை எதுவுமின்றி மீண்டும் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றமையினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இனி கடும் நடவடிக்கை பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸ்மா அதிபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் பேரழிவு மற்றும் போக்குவரத்து ஒழுக்கம் ஆகியவையே பொலிஸ் திணைக்களம் எதிர்கொள்ளும் மூன்று பிரதான சவால்கள் என பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த சவால்களை எதிர்கொள்ள மனித வள அபிவிருத்தி, அதிகாரிகளின் ஆளுமை விருத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், தற்போது பொலிஸ் திணைக்களத்தில் 38,000 முதல் 40,000 வரையிலான அதிகாரிகள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், 10,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை சுமார் 1,500 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் 950 பேரை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், அதிகாரிகளின் ஒழுக்கம் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நீண்டகாலமாக நிலவி வந்த பதவி உயர்வு தாமதப் பிரச்சினையை இந்த வருடத்திற்குள் முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பொலிஸ் சேவையை உருவாக்குவதே முக்கியம் என வலியுறுத்திய பொலிஸ்மா அதிபர், அதற்காக அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த விசேட பயிற்சிகளும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில்சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்றுடன் தொடர்புடையதாகக் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கை எதுவுமின்றி மீண்டும் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றமையினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.