இந்திய தலைநகர் டெல்லிக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7.2 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக டெல்லியில் நிலநடுக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதேவேளை சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லைப் பகுதியில் பதிவாகிய நிலநடுக்கத்தின் தாக்கமே டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நள்ளிரவு சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். பீதியில் உறைந்த மக்கள் இந்திய தலைநகர் டெல்லிக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7.2 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக டெல்லியில் நிலநடுக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.இதேவேளை சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லைப் பகுதியில் பதிவாகிய நிலநடுக்கத்தின் தாக்கமே டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நள்ளிரவு சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.